/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொருளீட்டு கடன் வழங்கும் வேளாண் வணிகத்துறை
/
பொருளீட்டு கடன் வழங்கும் வேளாண் வணிகத்துறை
ADDED : மார் 04, 2025 11:24 PM
சூலுார்; ஒழுங்குமுறை கூடத்தில் இருப்பு வைக்கும் விளைபொருட்களுக்கு, குறைந்த வட்டியில் பொருளீட்டு கடன் வழங்கப்படுவதாக, வேளாண் வணிகத்துறை தெரிவித்துள்ளது.
செஞ்சேரியில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செய்யபடுகிறது. இங்கு, கொப்பரை, மக்காச்சோளம் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு வைத்து, குறைந்த வட்டியில் பொருளீட்டு கடன் பெறலாம்.
கோவை மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் கூறியதாவது:
செஞ்சேரிமலை ஒழுங்குமுறை விற்பனை கூட பகுதிக்கு உட்பட்ட, பூராண்டாம்பாளையம், தாளக்கரை, செஞ்சேரிபுத்துார், ஜே.கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோள அறுவடை முடிந்துள்ளது. அறுவடை செய்த மக்காச்சோளத்தை, விவசாயிகள், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் உள்ள களத்தில் உலர்த்திக்கொள்ளலாம்.
மேலும், வாடகை அடிப்படையில், மக்காச்சோளத்தை இருப்பு வைத்து கொள்ளலாம். தற்போது, 174 மெட்ரிக் டன் மக்காச்சோளம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதை அடமானம் வைக்க விருப்பம் உள்ளோருக்கு, குறைந்த வட்டியில், 5 லட்சம் ரூபாய் வரையில் பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது.
விருப்பம் உள்ள விவசாயிகள் 95977 71442 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.