/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாய செய்தி தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் மானியம்
/
விவசாய செய்தி தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் மானியம்
விவசாய செய்தி தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் மானியம்
விவசாய செய்தி தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் மானியம்
ADDED : ஜூன் 30, 2024 10:51 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு விவசாயிகள், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் வாயிலாக மானிய திட்டங்களை பெற தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.
கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கம் 2024 - 25ம் ஆண்டு, மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், உயர் ரக பப்பாளி நாற்றுகள் நடவு செய்ய, ஒரு ஹெக்டேருக்கு, 23,100 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
அடர் நடவு மா பயிர் செய்ய, ஒரு ஹெக்டேருக்கு, 9,840 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மற்றும் மா மரம் கவாத்து செய்வதற்கு, ஒரு ஏக்கருக்கு, 20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
மண்புழு உர கூடாரம் (வெர்னி பெட்) அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களை பெற்று விவசாயிகள் பயன் பெற வேண்டும்.
மேலும், இத்திட்டங்கள் பற்றி சந்தேகங்கள் இருப்பின் கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இத்தகவலை கிணத்துக்கடவு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.