/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாய செய்தி தக்காளி சாகுபடியில் கவனம் செலுத்துங்க!
/
விவசாய செய்தி தக்காளி சாகுபடியில் கவனம் செலுத்துங்க!
விவசாய செய்தி தக்காளி சாகுபடியில் கவனம் செலுத்துங்க!
விவசாய செய்தி தக்காளி சாகுபடியில் கவனம் செலுத்துங்க!
ADDED : ஜூலை 30, 2024 02:08 AM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் தக்காளி சாகுபடியில் கவனம் செலுத்த வேண்டும் என, தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.
கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் தென்னைக்கு அடுத்த படியாக, தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, 100 ஏக்கருக்கு அதிகமாக தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இதில், நோய் தாக்குதல் ஏற்பட அதிக வாய்புள்ளது. இதை தவிர்க்க, கவனம் செலுத்த வேண்டும் என தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.
இதில், தக்காளி நாற்றுகளை நடும் போது சூடோமோனாஸ், 10 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்களை, 30 நிமிடங்கள் ஊற வைத்து நடுவது அவசியமாகிறது. பறவை தாங்கிகள், 10 எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
சாறு உருஞ்சும் பூச்சிகளுக்கு, அசாடிராக்ட்டினை, 2.5 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், சாறு உறிஞ்சும் பூச்சியினை கட்டுப்படுத்தலாம். மேலும், வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட செடிகளுக்கு, ஒரு லிட்டர் தண்ணீரில், 1 மில்லி அளவு பர்பெக்ட் மருந்து கலந்து தெளிக்க வேண்டும். இத்தகலவலை, கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.