/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்ணை ஆய்வு செய்து பயிர் செய்ய வேளாண் துறை அறிவுரை
/
மண்ணை ஆய்வு செய்து பயிர் செய்ய வேளாண் துறை அறிவுரை
மண்ணை ஆய்வு செய்து பயிர் செய்ய வேளாண் துறை அறிவுரை
மண்ணை ஆய்வு செய்து பயிர் செய்ய வேளாண் துறை அறிவுரை
ADDED : மே 05, 2024 11:20 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு வேளாண் துறை சார்பில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் மண் பரிசோதனை செய்யப்படுகிறது.
கிணத்துக்கடவு சுற்று வட்டார கிராமங்களில் வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் பலர் கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு கிணத்துக்கடவு வேளாண் துறை சார்பில், 2024 - 2025ல் தேர்வு செய்யப்பட்ட கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில், மண் பரிசோதனை செய்யப்படுகிறது.
இதற்கு, கோவை வேளாண் அலுவலர் (மண் பரிசோதனை ஆய்வகம்) திவ்யதர்ஷினி, கிணத்துக்கடவு வேளாண் அலுவலர் அருள்கவிதா ஆகியோர் பொறுப்பு அலுவலர்களாக உள்ளனர்.
மேலும், இப்பகுதியில் உள்ள மண்ணை ஆய்வு செய்து, எந்த பயிர் பயிரிட வேண்டும். மண் வளம் அறிந்து உரம் இடுதல் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராம விவசாயிகளுக்கு இலவசமாக மண் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். மேலும், விவசாயிகள் கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதி வேளாண் பொறுப்பு அலுவலர்களையோ, அல்லது கிணத்துக்கடவு வேளாண் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ள வேண்டும்.
இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.