/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாய கண்காட்சி நாளை துவக்கம்
/
விவசாய கண்காட்சி நாளை துவக்கம்
ADDED : மே 31, 2024 12:09 AM
பொள்ளாச்சி:'பச்சை பூமி' வேளாண் மாத இதழ் சார்பிலான விவசாய கண்காட்சி, பொள்ளாச்சி கந்த மஹாலில், நாளை துவங்கி, 3ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. தினமும், காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது.
விதைகள், பழமரக் கன்றுகள், தென்னங்கன்றுகள், உரங்கள், டிராக்டர்கள், ரொட்டோவேட்டர்கள், தெளிப்பான்கள், பண்ணைக்கருவிகளுடன் அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
மேலும், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை, பட்டு, பால்வளம் என, அரசுத் துறை சார்ந்த அரங்கு, கால்நடை வளர்ப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, வங்கிகள் என, விவசாயிகள் பயன்பெறும் வகையில், நுாற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு, 81487 77145 என்ற மொபைல்போனில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.