/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாய செய்தி மசாலா பொடி, ஊறுகாய் தயாரிக்க இரு நாள் பயிற்சி
/
விவசாய செய்தி மசாலா பொடி, ஊறுகாய் தயாரிக்க இரு நாள் பயிற்சி
விவசாய செய்தி மசாலா பொடி, ஊறுகாய் தயாரிக்க இரு நாள் பயிற்சி
விவசாய செய்தி மசாலா பொடி, ஊறுகாய் தயாரிக்க இரு நாள் பயிற்சி
ADDED : ஜூன் 24, 2024 10:50 PM
பொள்ளாச்சி;தமிழ்நாடு வேளாண் பல்கலையில், மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி, இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில், மசாலா பொடிகள், தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் உள்ளிட்டவை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் 1,770 ரூபாய் பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 'அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை 641003' என்ற முகவரியிலோ, 94885 18268 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என, பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.