ADDED : ஏப் 01, 2024 12:39 AM
கோவை;சின்னவேடம்பட்டி, டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில், 16வது பட்டமளிப்பு விழா நடந்தது.
எஸ்.என்.எஸ்., கல்விக்குழுமங்களின் தலைவர் சுப்ரமணியன், தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார் ஆகியோர் விழாவிற்கு தலைமை வகித்தனர்.
அசன்ஜர், அனலிடிக்ஸ் அட்வைசரின் துணைத் தலைவர் ராஜ ராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
அவர் தம் உரையில், ''செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் போது பொறுப்புடன், நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மனித உரிமைகளை மதிக்கும் வகையில் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்,'' என்றார்.
இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், 768 பேருக்கு, பட்டம் வழங்கப்பட்டது. கல்லுாரியின் தாளாளர் ராஜலட்சுமி, எஸ். என்.எஸ் நிறுவனங்களின் சி.இ.ஓ., டேனியல், முதல்வர் அனிதா, துணை முதல்வர் நரேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
