/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜெ., பிறந்தநாளை பிரியாணியுடன் கொண்டாடிய அ.தி.மு.க.,வினர்
/
ஜெ., பிறந்தநாளை பிரியாணியுடன் கொண்டாடிய அ.தி.மு.க.,வினர்
ஜெ., பிறந்தநாளை பிரியாணியுடன் கொண்டாடிய அ.தி.மு.க.,வினர்
ஜெ., பிறந்தநாளை பிரியாணியுடன் கொண்டாடிய அ.தி.மு.க.,வினர்
ADDED : பிப் 24, 2025 11:31 PM

கோவை; முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் அ.தி.மு.க.,வினர் இனிப்புடன் அசைவ உணவு வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை, அ.தி.மு.க.,வினர் நேற்று விமரிசையாகக் கொண்டாடினர். கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனன் தலைமையில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்து, அவிநாசி சாலைக்கு மேள தாளம் முழங்க ஊர்வலமாகச் சென்று, ஜெ., சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அப்போது, எம்.ஜி.ஆர்.,ஜெ., ஆகியோரை வாழ்த்தி, கோஷம் எழுப்பப்பட்டது.
கட்சி அலுவலகத்தில், கட்சி கொடியேற்றி, ஜெ., உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அங்கு குழுமியிருந்த அனைவருக்கும், அசைவ பிரியாணி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., ஜெயராமன், கழக அமைப்புச் செயலாளர் செ.ம.வேலுசாமி, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகர் மாவட்டம் சார்பில், உக்கடம் பஸ் ஸ்டாண்ட், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட், டைடல் பார்க், ஜி.எம்.நகர் டான் பாஸ்கோ அன்பு இல்லம் உட்பட, 50க்கு மேற்பட்ட இடங்களில் அன்னதானம் நடந்தது.
கோவை புறநகர், தெற்கு மாவட்ட அ.தி.மு.க., மற்றும் கிளைக் கழகங்கள், ஜெ., பேரவை சார்பிலும், பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

