/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு மராத்தான் போட்டி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு மராத்தான் போட்டி
ADDED : செப் 01, 2024 12:35 AM

கோவை:தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் கோவை மாவட்ட தடகள சங்கம் சார்பில், சர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு, மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.
ஐந்து கி.மீ., துாரம் நடந்த போட்டியின் பெண்கள் பிரிவில், நிர்மலா கல்லுாரி மாணவி தேவதர்ஷினி முதல் இடம் பிடித்தார். என்.ஜி.பி., கல்லுாரி மாணவி சவுமியா, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி மாணவி கிருத்திகா முறையே இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்தனர்.
ஆண்கள் பிரிவில், வி.எல்.பி., கல்லுாரி மாணவர், சதீஸ் முதலிடம் பிடித்தார். இரண்டாம் இடத்தை அதே கல்லுாரி மாணவர் யோகேஷ், பி.எஸ்.ஜி., கல்லுாரி மாணவர் ஹரிஸ் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்ற திருநங்கைகள், திருநம்பிகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவை மண்டல முதுநிலை மேலாளர் அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்தன், மாவட்ட தடகள சங்க செயலாளர் சம்சுதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய, மாவட்ட திட்ட மேலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.