/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.350 கோடி வரை கல்வி கடன் வழங்க இலக்கு! வங்கியாளர் கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் தகவல்
/
ரூ.350 கோடி வரை கல்வி கடன் வழங்க இலக்கு! வங்கியாளர் கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் தகவல்
ரூ.350 கோடி வரை கல்வி கடன் வழங்க இலக்கு! வங்கியாளர் கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் தகவல்
ரூ.350 கோடி வரை கல்வி கடன் வழங்க இலக்கு! வங்கியாளர் கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் தகவல்
ADDED : மே 23, 2024 04:50 AM

கோவை: கல்விக்கடன் வழங்குவது தொடர்பாக, நேற்று நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானதையடுத்து, அனைத்து வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன் முன்னிலை வகித்தார். கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார்.
கோவை சுற்றுவட்டார பகுதிகளில், சமீபத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி, அதனால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கிய கடன் தொகை நிலுவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, கடன் மறுசீரமைப்பு திட்டங்கள் கிடைக்கும் வகையில், மாநில அளவிலான வங்கியாளர் குழுவுக்கு, தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது.
பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் உயர்கல்வி கற்பதற்கு தேவையான கல்வி கடன் வழங்க, வங்கிகள் முனைப்பு காட்ட வேண்டும்.
மாணவர்களை அலைக்கழிக்காமல், அவர்களது விண்ணப்பத்துக்கு முன்னுரிமை அளித்து கல்வி கடன் வழங்க, வங்கியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக, கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:
உயர் கல்வி கற்கும் மாணவ - மாணவியருக்கு கடந்த கல்வியாண்டில் சிறப்பு முகாம்கள் நடத்தி, 290 கோடி ரூபாய் வரை கல்வி கடன் வழங்கப்பட்டது.
மாநில அளவில் கோவை மாவட்டம் இரண்டாமிடம் பெற்றது. இம்முறை கல்வியாண்டு துவக்கத்திலேயே, சிறப்பு முகாம்கள் நடத்த ஆலோசித்து வருகிறோம்.
கடந்த முறை என்னென்ன சிக்கல்கள் ஏற்பட்டன என்பதை ஆய்வு செய்து, இம்முறை அதை தவிர்க்க இருக்கிறோம்.
உயர் கல்வி கற்பவர்கள், கோவையில் படிப்பவர்களாக இருந்தாலும், அவர்களது சொந்த ஊர் வேறு மாவட்டமாக இருந்தாலும், அம்மாவட்ட வங்கிகளுக்கு விண்ணப்பத்தை பரிந்துரை செய்தனர்.
அதை தவிர்த்து, கோவையில் மாணவர்கள் படிப்பதால், இங்குள்ள வங்கிகளே கல்வி கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டது.
ஒவ்வொரு முகாம்களுக்கும், அனைத்து வங்கியாளர்களையும் வரவழைத்து, கல்வி கடன் விண்ணப்பங்கள் பெறுவதற்கு பதிலாக, ஒரு கல்வி நிறுவனத்தை ஒரு வங்கி தத்தெடுப்பது போல், அந்நிறுவனத்துக்கு உட்பட்ட அனைத்து விதமான கடன்களையும், ஒரு வங்கியே மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.
இதை வங்கியாளர்கள் வரவேற்றுள்ளனர். கவுன்சிலிங் துவங்க இருப்பதால், இவ்வாண்டு இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படும். நடப்பு நிதியாண்டில், ரூ.300 - ரூ.350 கோடி வரை கல்வி கடன் வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

