/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டு எண்ணும் இடத்தில் ஏஜன்ட்டுகளுக்கு 'ஏர் கூலர்'
/
ஓட்டு எண்ணும் இடத்தில் ஏஜன்ட்டுகளுக்கு 'ஏர் கூலர்'
ஓட்டு எண்ணும் இடத்தில் ஏஜன்ட்டுகளுக்கு 'ஏர் கூலர்'
ஓட்டு எண்ணும் இடத்தில் ஏஜன்ட்டுகளுக்கு 'ஏர் கூலர்'
ADDED : மே 05, 2024 12:17 AM

கோவை:கோவையில் ஓட்டு எண்ணும் மையமான ஜி.சி.டி., கல்லுாரியில், வேட்பாளர்களின் ஏஜன்ட்டுகளுக்காக, இரண்டு 'ஏர் கூலர்' அமைக்கப்பட்டுள்ளது.
கோவை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள், ஜி.சி.டி., கல்லுாரியில் வரும் ஜூன் 4ல் எண்ணப்படுகின்றன. 'ஸ்ட்ராங் ரூம்'களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வேட்பாளர்களின் ஏஜன்ட்டுகள், தலா எட்டு மணி நேரம் வீதம் மூன்று ஷிப்ட்டுகளாக பணிபுரிகின்றனர். பா.ஜ., சார்பில் சுவாமிநாதன், ரமேஷ், தி.மு.க., சார்பில் ஆர்.எஸ்.புரம் பூபாலன், கதிரவன், அ.தி.மு.க., சார்பில் விஜய் உள்ளிட்டோர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இவர்களுக்காக, தகர கூடாரம் போடப்பட்டு இருக்கிறது. அதில், மூன்று 'டிவி' மானிட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்றில், கல்லுாரி நுழைவாயில் மற்றும் ஸ்ட்ராங் ரூம்களின் பக்கவாட்டு பகுதி தெரியும். இரண்டாவது திரையில், ஸ்ட்ராங் ரூம்களுக்கு செல்லும் வழித்தடம், மூன்றாவது திரையில், ஆறு ஸ்ட்ராங் ரூம்கள் மட்டும் தெரியும். நான்கு மின் விசிறி கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் ஆய்வுக்கு வந்தபோது, ஏஜன்ட்டுகளிடம் பேசினார். அப்போது, வெப்பம் அதிகரித்து காணப்படுவதால், தகர கொட்டகைக்கு கீழ் அமர முடியவில்லை. 'ஏர் கூலர்' அமைத்துக் கொடுத்தால் வசதியாக இருக்கும் என ஏஜன்ட்டுகள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, இரு 'ஏர் கூலர்'கள் நேற்று வழங்கப்பட்டதால், ஏஜன்ட்டுகள் மகிழ்ச்சி அடைந்தனர்.