ADDED : பிப் 23, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் கோவை ரயில் நிலையம் வந்த போது, ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று சோதனை செய்தனர்.
பின்பக்க பொதுஜன பெட்டியின் கதவு அருகில், இரண்டு பைகள் இருந்தன. அந்த பைகள் யாருடையது என கேட்ட போது, பயணியர் யாரும் முன்வரவில்லை. பைகளை கீழே இறக்கி சோதனை செய்த போது, அதில், ரூ. 11,639 மதிப்பிலான, 15 லிட்டர் மதுபானம் இருந்தது.
ரயில்வே போலீசார் அதை பறிமுதல் செய்து, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

