/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மது விற்றவர்கள் கைது; போலீசார் நடவடிக்கை
/
மது விற்றவர்கள் கைது; போலீசார் நடவடிக்கை
ADDED : ஜூன் 26, 2024 09:33 PM
நெகமம் : நெகமம் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெகமம் சுற்று வட்டார பகுதியில், சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
இதில், காட்டம்பட்டி அரசு மதுபான டாஸ்மாக் கடை அருகே, திருச்செந்தூரைச்சேர்ந்த பேச்சிராஜா, 40 என்பவர் சட்ட விரோதமாக மது விற்றது உறுதியானதை தொடர்ந்து, 24 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் வடசித்தூர் டாஸ்மாக் அருகே, ராமநாதபுரத்தைச்சேர்ந்த பிரபாகரன், 33 என்பவரிடம் இருந்து, 108 மது பாட்டில்கள் என மொத்தம், 132 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், சட்ட விரோத மது விற்பனை செய்தவர்களை கைது செய்து வழக்கு பதியப்பட்டுள்ளது.