/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகில இந்திய ஹேண்ட்பால் கற்பகம் பல்கலை அணி தகுதி
/
அகில இந்திய ஹேண்ட்பால் கற்பகம் பல்கலை அணி தகுதி
ADDED : மே 06, 2024 12:14 AM
கோவை:கேரளாவில் நடக்கவுள்ள அகில இந்திய பல்கலைகளுக்கு இடையேயான ஹேண்ட்பால் போட்டிக்கு கோவை கற்பகம் பல்கலை அணி தேர்வாகியுள்ளது.
பல்கலைகளுக்கு இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், தென் மண்டல அளவிலான பல்கலைகளுக்கு இடையேயான ஹேண்ட்பால் போட்டி கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலையில் நடக்கிறது.
இப்போட்டியில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 90க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்று நாக் அவுட் மற்றும் லீக் முறைப்படி போட்டியிடுகின்றன.
இப்போட்டியில், ஈச்சனாரி கற்பகம் பல்கலை அணி மாணவர்கள் நாக் அவுட் சுற்றின் ஐந்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று, லீக் சுற்றுக்கு தகுதி பெற்றனர். நேற்று மாலை துவங்கிய லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா மூன்று போட்டிகளில் மோதுகின்றன.
லீக் சுற்றுக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளும் அகில இந்திய பல்கலைகளுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றன.
வரும், 8ம் தேதி துவங்கும் அகில இந்திய போட்டியில் மண்டல அளவில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் பங்கேற்கின்றன.
அகில இந்திய போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களை கற்பகம் பல்கலை துணை வேந்தர் வெங்கடாஜலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.