/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு! விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
/
சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு! விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு! விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு! விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
ADDED : மே 29, 2024 11:46 PM
கிணத்துக்கடவு : கோவையில் சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறை சார்பில், 1.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் இணை இயக்குநர் பெருமாள்சாமி அறிக்கை வருமாறு: கோவை மாவட்டத்தில், சராசரியாக, 30,270 ஹெக்டேர் பரப்பளவில் சோளம், கம்பு, ராகி, தினை, சாமை, வரகு ஆகிய பயிர்கள் சாகுபடி உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக, 609 மி.மீ., மழை பெய்கிறது.
இந்த சிறு தானிய சாகுபடியை ஊக்குவித்து, உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் வாயிலாக ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டதின் கீழ், 1.48 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
சிறு தானியங்கள், குறைவான நீர் தேவை கொண்டவை. குறுகிய கால பயிர்களாகும். குறைந்த மண்வளத்திலும் சாகுபடி செய்யலாம்.
சிறு தானியத்தில் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை கோவை மாவட்டத்தில் ஊக்குவிக்கவும், அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக மானியம் வழங்கப்படுகிறது.
சோளம், கம்பு சாகுபடியில், 2.5 ஏக்கர் சாகுபடி செய்ய, 6 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. உயர் விளைச்சல் ரகங்களை பயன்படுத்த பத்து ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட தானிய ரகங்கள் கிலோவிற்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
விவசாயிகளே விதை உற்பத்தி செய்து வழங்கினால், விதை உற்பத்தி மானியம் ஒரு கிலோவுக்கு, 30 ரூபாய் வழங்கப்படுகிறது. பயிர்களுக்கு தேவையான நுண்ணூட்டங்களுக்கு, ஒரு ஹெக்டேர், 12.5 கிலோவுக்கு, 500 ரூபாய் மானியம் மற்றும் திரவ உயிர் உரங்களுக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
மழை நீரை விளைச்சல் நிலத்தில் சேமிக்க, கோடை உழவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு, இரண்டாயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு, வட்டார வேளாண் உதவு இயக்குநர்களையோ அல்லது மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்க ஆலோசகரைதொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.