/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயறுவகை சாகுபடியை அதிகரிக்க 49 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
/
பயறுவகை சாகுபடியை அதிகரிக்க 49 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
பயறுவகை சாகுபடியை அதிகரிக்க 49 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
பயறுவகை சாகுபடியை அதிகரிக்க 49 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
ADDED : ஜூன் 01, 2024 11:35 PM

கோவை:கோவை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் துவரை, உளுந்து, பச்சை பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, தட்டை உள்ளிட்ட பயறு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
பயறு வகைகள் குறுகிய கால பயிர் என்பதால், சாகுபடிக்கு குறைந்த நீர் போதுமானது. அதனால் பயறு வகை சாகுபடியை அதிகரிக்கும் வகையில், உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் சார்பில், பயறு வகைத் திட்டத்துக்கு, 49 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், உளுந்துக்கு 2.5 ஏக்கருக்கு 8500 ரூபாய்- மானியத்தில் விதைகள், பயிறு நுண்ணுாட்டம் பொருட்கள் மற்றும் உரங்கள் வழங்கப்படுகின்றன. கொண்டைக்கடலைக்கு 2.5 ஏக்கருக்கு 9000 - மானியத்தில் 75 கிலோ விதை மற்றும் பயறு நுண்ணுாட்டம் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
10 ஆண்டுகளுக்குள் சான்று பெற்ற வீரிய உளுந்து, கொண்டைக்கடலை மற்றும் தட்டை விதைகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. வீரியமிக்க சான்று பெற்ற கொண்டைக்கடலை, உளுந்து,தட்டை விதைகளை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு, 25 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இது குறித்த விபரங்களுக்கு, விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் அல்லது உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்ட ஆலோசகர்களை, 99449 77563 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.

