/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
17 பணிகளுக்கு ரூ.92 லட்சம் ஒதுக்கீடு
/
17 பணிகளுக்கு ரூ.92 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஆக 15, 2024 11:53 PM
அன்னுார் : அன்னுார் ஒன்றியத்தில், 17 பணிகளுக்கு, 92 லட்சம் ரூபாய் ஒதுக்கி, கலெக்டர் நிர்வாக அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
அன்னுார் வட்டாரத்தில், அல்லபாளையம், கனுவக்கரை, பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சிகளில், குடிநீர் பணிகளுக்கு, 24 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மசக்கவுண்டன் செட்டிபாளையம், அ.மேட்டுப்பாளையம், காட்டம்பட்டி, கஞ்சப்பள்ளி ஊராட்சிகளில், எட்டு சுகாதார பணிகளுக்கு, 28 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கஞ்சப்பள்ளி, குப்பனுார், மசக்கவுண்டன்செட்டிபாளையம், வடவள்ளி, ஒட்டர் பாளையம், காரேகவுண்டம் பாளையம் ஊராட்சிகளில் கான்கிரீட் சாலை, சிறு பாலம் உள்ளிட்ட, 6 பணிகளுக்கு, 39 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
15வது நிதி குழு மானியம், 89 லட்சத்து 27 ஆயிரத்து 593 ரூபாய், ஒன்றிய பொது நிதி 3 லட்சத்து 60,406 ரூபாய் என, 92 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயை, 17 பணிகளுக்கு ஒதுக்கி, நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
'உடனே பணிகள் துவங்க வேண்டும். நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட்ட பணிகளை ரத்து செய்ய கோரக் கூடாது.
எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் பணிகளை முடிக்க வேண்டும்,' என கோவை கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

