ADDED : மார் 30, 2024 11:45 PM
அ நிறம் | அளவு
கோவை;கோவை ராம்நகரிலுள்ள, கோயமுத்துார் பெரியவா மண்டலி சார்பில், அனுஷ நட்சத்திரமான நேற்று, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஏழைகளுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.
அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்த மகாபெரியவர், நடமாடும் தெய்வமாக விளங்கிய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருநட்சத்திரமான நேற்று, கோயமுத்துார் பெரியவா மண்டலி சார்பில், கோவை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு, மதிய நேரம் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளானோர் பெற்று சென்றனர்.
அறங்காவலர் கிருஷ்ணன் கூறுகையில், ''ஒவ்வொரு மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திரத்தில் இது போன்று அன்னதானம் செய்கிறோம்.
''புது பெரியவா என்றழைக்கப்படும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவிட்ட நட்சத்திரத்திலும், அன்னதானம் செய்கிறோம்,'' என்றார்.
