/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் பள்ளியில் இணைந்து மகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்
/
மீண்டும் பள்ளியில் இணைந்து மகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்
மீண்டும் பள்ளியில் இணைந்து மகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்
மீண்டும் பள்ளியில் இணைந்து மகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்
ADDED : மே 29, 2024 12:48 AM

கோவை;மதுக்கரை ரோடு, டிரினிட்டி நகர், பிரசன்டேசன் கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர் சங்க துவக்க விழா நடந்தது.
பள்ளியின் முன்னாள் முதல்வர் மரியா சாந்தா, தற்போதைய முதல்வர் லில்லி புளோரா கிரேஸ், விழாவிற்கு தலைமை வகித்தனர்.
பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர் பிரசன்னா, சங்கத்தை துவக்கி வைத்து, சங்கத்தின் லோகோவை அறிமுகம் செய்து வைத்தார். ஆசிரியர் எல்பி மேத்யூ முன்னிலையில், சங்கத்தின் தலைவராக அப்பாஸ், துணைத் தலைவராக கிங்ஸ்டன் பிரபு மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை கவுரவித்தனர். ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும், தங்கள் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில், 29 ஆசிரியர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.