ADDED : செப் 08, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவை ரேஸ்கோர்ஸிலுள்ள அரசு கலைக்கல்லுாரியில் படித்த, முன்னாள் மாணவர் சங்கத்தின், 91வது ஆண்டுவிழா மற்றும் முப்பெரும் விழா, கல்லூரி வளாகத்தில் வரும் 29 காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில், இக்கல்லுாரியில் படித்து, தற்போது பல்வேறு பதவிகளிலும், பொறுப்புகளிலும் உள்ள, முன்னாள் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
காலை துவங்கி மாலை வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இதில் பங்கேற்க, முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.