/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
ADDED : ஆக 14, 2024 09:02 PM

போத்தனூர் : ஒத்தக்கால்மண்டபத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
ஒத்தக்கால்மண்டபம், பிரீமியர் நகர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 1986ல் பத்தாம் வகுப்பு முடித்து வெளியேறிய மாணவர்களின் சந்திப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஆக., மாதம் நடத்தப்படுகிறது.
இம்மாணவர்கள் சார்பில், பள்ளிக்கு விழா அரங்கு, கொடிக்கம்பம் அமைத்து தரப்பட்டது. இவ்வாண்டு நடந்த சந்திப்பில், விழா அரங்கிற்கு கிரானைட் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மதுக்கரை ஒன்றிய தி.மு.க., செயலாளர் விஜயசேகர், சிவில் இன்ஜி., செந்தில்குமார், சமூக ஆர்வலர் ஆர்.செந்தில்குமார் மற்றும், 30 பெண்கள் உட்பட, 90 பேர் பங்கேற்றனர். மதிய விருந்து முடிந்து அனைவரும் விடைபெற்றனர்.