/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலைக்கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
அரசு கலைக்கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அரசு கலைக்கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அரசு கலைக்கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : மார் 02, 2025 04:51 AM

கோவை : அரசு கலைக்கல்லுாரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், கடந்த கால நினைவுகள் பகிரப்பட்டன.
கோவை அரசு கலைக்கல்லுாரியில், 1970 - 73ம் ஆண்டு பி.காம்., பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. 52 ஆண்டுகளுக்கு பின், சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள், தங்களது கல்லுாரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கல்லுாரியில், பேராசிரியர்கள் தங்களுக்கு பாடம் எடுத்த விதம் குறித்து பேசி மகிழ்ந்தனர். முன்னாள் மாணவர்களில் தேசிய ஜவுளி கழகம், வணிக வரித்துறை, சுங்கத்தீர்வை, போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகள், வங்கிகளில் பணிபுரிந்த முன்னாள் மாணவர்கள் பலரும் ஒன்றாக இணைந்து அளவளாவினர்.
கல்லுாரி முதல்வர் எழிலி, முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்றார். முன்னாள் மாணவர் ராமமூர்த்தி வரவேற்றார்.