/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செயின்ட் மைக்கேல் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
செயின்ட் மைக்கேல் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
செயின்ட் மைக்கேல் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
செயின்ட் மைக்கேல் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஏப் 23, 2024 02:09 AM

கோவை;கோவை பெரியகடைவீதியிலுள்ள புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் , 1983, 84, 85 ஆகிய ஆண்டுகளில் எஸ்.எஸ்.எல்.சி., படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நாற்பதாண்டுகளுக்கு பின்பு, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பள்ளி தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் அருட்திரு. ஹென்றி டேனியல் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்களுக்கு பள்ளியின் விடுதிக்காப்பாளராக இருந்தவரும் தற்போது ஒண்டிப்புதூர் புனித சூசையப்பர் ஆலய பங்குதந்தையுமான அருட்திரு. ஆரோக்கியசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக் கொண்ட மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னாள் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்று அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு மனதார வாழ்த்தினர். முன்னாள் ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டி, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். விழா ஒருங்கிணைப்பாளர்களாக முன்னாள் மாணவர்களான பால் வில்லியம், சக்திவேல், திருஞானசம்பந்தம், மகாலிங்கம், ஜேசுதாஸ், லியோனாட் அசோக் ஆகியோர் இருந்தனர்.
பள்ளியின் தற்போதைய ஆசிரியர்கள் பாக்கியநாதன், பிரின்ஸ், தாமஸ், ஜெரால்டு, கிலிசன், மனோஜ் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
விழாவில், முன்னாள் மாணவர்களின் தலைமையாசிரியர் அருட்திரு. ஆன்டனி லாரன்ஸ் நினைவாக பள்ளி வளாகத்தில் கலைமேடை அமைக்க முடிவு செய்து, அருட்தந்தையர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

