/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமாவாசை, ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
அமாவாசை, ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு
அமாவாசை, ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு
அமாவாசை, ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஆக 04, 2024 10:19 PM

பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், அடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், அமாவாசையையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, பொள்ளாச்சி மாரியம்மன கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், நெகமம் வீரமாச்சியம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில்களில், காலையில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆற்றங்கரையில் புரோகிதர்கள் வழிகாட்டுதலின் படி. முன்னோர்களுக்கு திதி கொடுத்து மக்கள் வழிபாடு செய்தனர்.
ஆற்றங்கரைகளில் மக்கள் கூட்டம்
ஆடி அமாவாசையையொட்டி அமராவதி மற்றும் திருமூர்த்திமலை நீர்நிலைகளின் கரைகளில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து மக்கள் வழிபாடு செய்தனர்.உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், ஆடி அமாவாசைக்காக கோவில்களில் நாள்முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும், கொழுமம் அமராவதி ஆற்றங்கரையிலும், திருமூர்த்திமலை பாலாற்றின் கரையிலும், முன்னோர்களுக்கு திதி கொடுத்து மக்கள் வழிபாடு செய்தனர். இதனால், ஆற்றங்கரைகளிலும், கோவில்களிலும், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
lஉடுமலை பூமாலை சந்து பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசையையொட்டி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலையில் பால், பன்னீர், மஞ்சள் உட்பட திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார பூஜையுடன் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆடிப்பெருக்கு பூஜை
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக பங்கேற்று, நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
முளைப்பாரி வழிபாடு
பொள்ளாச்சி கே.கே.ஜி., திருமணமண்டபம் அருகே, டி. கோட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த பக்தர்கள், திரு மாங்கல்ய சுபிட்ஷம் வேண்டி, முளைப்பாரி எடுத்தனர்.
அதன்பின், டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் மற்றும் ஊரின் முக்கியப்பகுதி வழியாக ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து வந்த பக்தர்கள், டி.கோட்டாம்பட்டி ஈஸ்வரன் கோவிலில் நிறைவு செய்தனர்.முளைப்பாரியை அங்கிருந்து அம்பராம்பாளையம் கொண்டு சென்று, ஆற்றில் கரைத்து வழிபாடு செய்தனர்.