/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிலம்பம் போட்டியில் அசத்திய வீரர்கள்
/
சிலம்பம் போட்டியில் அசத்திய வீரர்கள்
ADDED : ஜூலை 22, 2024 02:58 AM

பொள்ளாச்சி;கோவையில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், பொள்ளாச்சியைச் சேர்ந்த வீரர், வீராங்கனையர் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர்.
நேஷனல் சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், மாநில அளவிலான சிலம்பம் போட்டி, கோவை எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் நடந்தது. போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனையர் கலந்து கொணடனர்.
பொள்ளாச்சி வேலுநாச்சியார் தற்காப்பு கலை மற்றும் சிவா சிலம்பாலயா வீரர், வீராங்கனையர் கலந்து கொண்டு அதிக இடங்களில் வெற்றனர். அதன்படி, வேலுநாச்சியார் தற்காப்பு கலை அமைப்பை சேர்ந்தவர்கள், ஒற்றை கம்பு பிரிவில் - 11 தங்கம், வெள்ளி - 9, வெண்கலப் பதக்கம் - 4 வென்றனர். இரட்டை கம்பு பிரிவில், தங்கம் - 2, வெள்ளிப்பதக்கம் - 2 வென்றனர்.
சிவா சிலம்பாலயாவைச் சேர்ந்தவர்கள், ஒற்றைக் கம்பு பிரிவில், வெள்ளி - 2, வெண்கலம் - 8; இரட்டைக் கம்பு பிரிவில், வெள்ளி - 2, சுருள்வாள் பிரிவில் வெள்ளி - 1, மான் கொம்பு பிரிவில், வெள்ளி - 1, வேல்கம்பு பிரிவில், வெண்கலம் - 1 வென்றனர். இவர்களை, நிறுவனர்கள் மணிகண்டன், பிரபு ஆகியோர் வாழ்த்தினர்.