/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரம் போட்டியில் அசத்திய மாணவர்கள்
/
கேரம் போட்டியில் அசத்திய மாணவர்கள்
ADDED : ஆக 04, 2024 10:18 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள், சிறுகளந்தை விக்னேஷ்வரா வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. போட்டியில், 50க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
14, 17 மற்றும், 19 வயது பிரிவு வாரியாக தனிநபர் மற்றும் இரட்டையர் போட்டிகளாக நடைபெற்றன.
மாணவர் பிரிவு
14வயது பிரிவில் ஒற்றையர் பிரிவில், கோமங்கலம்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், ஏ.எம்.எஸ்., பள்ளி இரண்டாமிடமும்; இரட்டையர் பிரிவில், பொள்ளாச்சி ஏ.எம்.எஸ்., பள்ளி முதலிடமும், சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி பள்ளி இரண்டாமிடமும் பெற்றது.
17 வயது ஒற்றையர் பிரிவில், கஞ்சம்பட்டி அரசு பள்ளி முதலிடமும், கோமங்கலம்புதுார் அரசு பள்ளி இரண்டாமிடமும்; இரட்டையர் பிரிவில், வடசித்துார் அரசு பள்ளி முதலிடமும், பொள்ளாச்சி ஏ.எம்.எஸ்., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
19 வயதினோருக்கான ஒற்றையர் பிரிவில், விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி முதலிடமும், காளியண்ணன்புதுார் பள்ளி இரண்டாமிடமும்; இரட்டையர் பிரிவில், விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி முதலிடமும், சிறுகளந்தை விக்னேஸ்வரா மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
மாணவியர் பிரிவு
14வயது ஒற்றையர் பிரிவில், கோமங்கலம்புதுார் அரசு பள்ளி முதலிடமும், மாரியம்மாள் பள்ளி இரண்டாமிடமும்; இரட்டையர் பிரிவில் மாரியம்மாள் பெண்கள் பள்ளி முதலிடமும், விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
17 வயது ஒற்றையர் பிரிவில், வடசித்துார் அரசு பள்ளி முதலிடமும், செஞ்சேரி மலையாடிபாளையம் அரசு பள்ளி இரண்டாமிடமும்; இரட்டையர் பிரிவில் மாரியம்மாள் பெண்கள் பள்ளி முதலிடமும், கொல்லப்பட்டி அரசு பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
19 வயது ஒற்றையர் பிரிவில், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், செஞ்சேரி மலையாடிபாளையம் பள்ளி இரண்டாமிடமும்; இரட்டையர் பிரிவில் ஏ.எம்.எஸ்., பள்ளி முதலிடமும், மாரியம்மாள் பெண்கள் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.