sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளை அம்மன் திருவீதி உலா

/

காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளை அம்மன் திருவீதி உலா

காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளை அம்மன் திருவீதி உலா

காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளை அம்மன் திருவீதி உலா


ADDED : ஏப் 21, 2024 11:58 PM

Google News

ADDED : ஏப் 21, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, பாலமாணிக்கம் வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டு விழா, நேற்று துவங்கிய நிலையில், வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. அதன்படி, நேற்று, காலை 8:30 மணிக்கு தெய்வக்குளம் காளியம்மன் கோவிலுக்குச்சென்று தீர்த்தம் கொண்டுவரப்பட்டது.

இரவு, 7:00 மணிக்கு, சக்தி கும்பஸ்தாபனம் செய்யப்பட்டது. இன்று, காலை, 7.00 மணி முதல் இரவு, 8.00 மணி வரை மாவிளக்கு பொங்கல் சுவாமிக்கு சந்தனகாப்பு மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

நாளை, காலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு முத்தங்கி அலங்காரமும், காலை 9:00 மணிக்கு, காமாட்சியம்மனுக்கும், ஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

உற்சவத்தை தொடர்ந்து பங்கேற்கும் பக்தர்கள் மொய் சமர்ப்பிக்கும் நிகழ்வும் அதையடுத்து திருக்கல்யாண விருந்தும் நடைபெறுகிறது. இதில் அறுசுவை உணவுகள் பரிமாறப்படுகிறது.

மாலை, 6:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. இதில், தவில் நாதஸ்வரம் மேளதாளங்களும் சிங்காரி மேளம் முழங்க, மயிலாட்டம், ஒயிலாட்டமும் வீதி உலாவில் இடம் பெறுகிறது.

இதையடுத்து இரவு, 8:00 மணிக்கு வானவேடிக்கையும் அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. வரும், 24ம் தேதி காலை, 8:45 மணிக்கு மகா அபிஷேகம், பகல், 12:00 மணிக்கு வெள்ளி தங்க கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடை, பாயசத்தோடு மகா நெய்வேத்தியம் செய்து சுவாமிக்கு தீபாராதனை சமர்ப்பிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us