ADDED : மே 17, 2026 06:30 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: அ.ம.மு.க., அன்னுார் ஒன்றிய நிர்வாகிகள் த.வெ.க.,வில் இணைந்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.ம.மு.க.,) அன்னுார் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய தலைவர் ராமசுப்பிரமணி, ஒன்றிய இணைச் செயலாளர் சங்கீதா, துணை செயலாளர் நாராயணசாமி மற்றும் ஊராட்சி செயலர்கள் அ.ம.மு.க., விலிருந்து விலகினர். அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க.,வில் இணைந்தனர்.
அவர்களுக்கு அமைச்சர் த.வெ.க., கட்சித் துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
