/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்ட பணிகள் தீவிரம்
/
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்ட பணிகள் தீவிரம்
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்ட பணிகள் தீவிரம்
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்ட பணிகள் தீவிரம்
ADDED : ஜூன் 03, 2024 12:09 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் பாரத் திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில் சந்திப்பு அல்லது ஸ்டேஷன்களை தொலை நோக்குப்பார்வையில் மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதில், பயணியருக்கு உண்டான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், சுத்தமான குடிநீர் வழங்கல், குளிரூட்டப்பட்ட பயணியர் காத்திருப்பு அறை, ரயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்து டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன.
மாற்றுத்திறன் பயணியருக்கு வசதி ஏற்படுத்துதல், வாகன காப்பிடம் மற்றும் தேவையான கட்டடங்கள் கட்டுவதாகும்.
இத்திட்டத்தின் கீழ், 1,275 ரயில்வே ஸ்டேஷன்களை நவீனமயமாக்கி மேம்படுத்தப்படுகிறது. அதில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில் தலா, 15 சந்திப்புகள் அடையாளம் காணப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதில், பாலக்காடு கோட்டத்துக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் பணிகள் மேற்கொள்ள, கடந்த ஏப்., மாதம் மின் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் பாரத் திட்டத்தில், 10.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நுழைவு வாயில் மேம்பாடு, 'ஏசி' வசதியுடன் காத்திருப்பு அறை, கூடுதல் கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
மேலும், பயணியர் வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்துவதற்காக, புதிய வாகன நிறுத்துமிடம் கட்டப்படுகிறது. முகப்பு பகுதி கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர். மேலும், பணிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.