/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலையில் உள்ளிருப்பு போராட்டம் வரும் 13ம் தேதி நடத்தப்போவதாக அறிவிப்பு

ADDED : மே 10, 2024 01:24 AM
கோவை:பாரதியார் பல்கலையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து, வரும் 13ம் தேதி முதல் துணைவேந்தர் அலுவலகம் முன் உள்ளிருப்பு மற்றும் உண்ணா விரத போராட்டம் நடத்தவுள்ளதாக, பல்கலை ஆசிரியர் சங்கம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலையின் அங்கமாக, பல்கலையின் விரிவாக்க மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
பல்கலையின் அனைத்து தரப்பு அதிகாரிகளுடனும், பல கட்டங்களாக பேசியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதிருப்தி எழுந்துள்ளது.
பல்கலை ஆசிரியர் சங்க நிர்வாகி திருநாவுக்கரசு கூறுகையில், ''பாரதியார் பல்கலையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, போராட்டம் நடத்தவுள்ளோம். பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, நான்கு மாத ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும்.
விரிவாக்க மையத்தில், புதியமுதுகலை பாடங்களை துவக்குதல், தேவையற்ற காரணங்களுக்காக கோப்புகளை நிறுத்தி வைத்தல், விரிவாக்க மையத்தில் இயக்குனர் பொறுப்பு அதிகாரி நியமித்தல் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி, 13ம் தேதி முதல் துணைவேந்தர் அறை முன், உண்ணாவிரதம், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்,'' என்றார்.