/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.எம்.எஸ்., கல்லுாரியை கலக்கிய 'ஓரா' கலை விழா
/
சி.எம்.எஸ்., கல்லுாரியை கலக்கிய 'ஓரா' கலை விழா
ADDED : மார் 08, 2025 11:32 PM

கோவை: குமிட்டிபதி, சி.எம்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 'ஓரா' என்ற, கல்லுாரி கலை விழா நடந்தது.
ஆடல், நடனம், குறும்படம், பேஷன் என பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பாடகி புண்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு பாடல்களை பாடி அசத்தினார். படைப்பாற்றல், குழு மனப்பான்மையை வளர்ப்பதில் கலைவிழாக்களின் முக்கியத்துவத்தை, கல்லுாரி முதல்வர் சுதா எடுத்துரைத்தார்.
சி.எம்.எஸ்., கல்வி அறக்கட்டளை தலைவர் கிரீசன், துணை தலைவர் சஜீஸ் குமார், செயலாளர் சந்திரகுமார், இணை செயலாளர் சசிதரன், பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கோப்பையும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.