/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் வாடல் நோய்; விவசாயிகளுக்கு விளக்கம்
/
தென்னையில் வாடல் நோய்; விவசாயிகளுக்கு விளக்கம்
ADDED : மே 30, 2024 04:58 AM
கோவை: வேளாண் பல்கலை தோட்டக்கலை மாணவர்கள், தொண்டாமுத்துார் பகுதி விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்கள் குறித்த செயல்விளக்கம் அளித்தனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இறுதியாண்டு மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு படிப்பின் ஒரு பகுதியாக கிராமங்களில் தங்கியுள்ளனர். இக்களப்பணி காலத்தில் விவசாயிகளின் சிரமங்களை அறிதல், தொழில்நுட்பங்களை கொண்டு சேர்த்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாணவர்கள் மேற்கொள்வார்கள்.
தொண்டாமுத்துாரில் நடந்த நிகழ்வில், மாணவர்கள் வேளாண் பல்கலையின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட தோட்டக்கலை தொழில்நுட்பங்கள் பயன்பாடு குறித்தும், தென்னை வாடல் நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்வில், தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் ஐரீன் வேதமணி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.