/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனைமலை - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: வசந்தராஜன்
/
ஆனைமலை - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: வசந்தராஜன்
ஆனைமலை - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: வசந்தராஜன்
ஆனைமலை - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: வசந்தராஜன்
UPDATED : மார் 31, 2024 11:25 AM
ADDED : மார் 30, 2024 11:57 PM
கோவை;''ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் கட்டாயம் நிறைவேற்றப்படும்; வேளான் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்,'' என்று பொள்ளாச்சி தொகுதி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் கூறினார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தேங்காய்க்கு சரியான விலை இல்லை. தென்னை மரங்களை நோய் தாக்கி அப்படியே அழிந்து வருகின்றன. மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வால்பாறையை மிக முக்கிய சுற்றுலா தலமாக மாற்றுதல், கிணத்துக்கடவில் கனிமவளக்கடத்தலை தடுத்தல், வெள்ளலுார் குப்பைகிடங்கை மாற்றுதல், போத்தனுாரை மிகப்பெரிய ரயில் முனையமாக மாற்றுதல், தங்கநகை தொழிலாளர்களுக்கென்று மிகப்பெரிய கிளஸ்டர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வேன்.
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் கட்டாயம் நிறைவேற்றப்படும். வேளான் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார். கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

