/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்களுக்கு ரத்தசோகை விழிப்புணர்வு; ஆரம்ப சுகாதார நிலையங்களில் துவக்கம்
/
பெண்களுக்கு ரத்தசோகை விழிப்புணர்வு; ஆரம்ப சுகாதார நிலையங்களில் துவக்கம்
பெண்களுக்கு ரத்தசோகை விழிப்புணர்வு; ஆரம்ப சுகாதார நிலையங்களில் துவக்கம்
பெண்களுக்கு ரத்தசோகை விழிப்புணர்வு; ஆரம்ப சுகாதார நிலையங்களில் துவக்கம்
ADDED : செப் 04, 2024 11:28 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்தசோகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், 'போஷன் அபியான்' என்ற மத்திய அரசின் திட்டத்தில், ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
நடப்பு வாரம், ஒவ்வொரு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்தசோகை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது.
அவ்வகையில், பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை நோய்களிலிருந்து பாதுகாப்பது, எடை குறைவான குழந்தைகளின் உடல் நலனுக்கு தேவையான ஊட்டச்சத்து, கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களின் உடல்நலம் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவும் உள்ளது.
குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:
வாரந்தோறும், ஒவ்வொரு தலைப்பின் கீழ், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அவ்வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில், பாலுாட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்கள் பயன்படும் வகையில் ரத்தசோகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அப்போது, அனைத்துத் துறை அலுவலர்கள், உள்ளாாட்சிப் பிரதிநிதிகள், சுய உதவிக்குழுக்கள் என பலரும் பங்கேற்க அறிவுறுத்தப்படுவர்.
கண்காட்சியில், பெண் கருவுற்ற நாள் முதல் குழந்தை பிறந்து, 2 வயது வரை, உட்கொள்ள வேண்டிய உணவுகள், ஊட்டச்சத்து சிறுதானியம் மற்றும் இணை உணவு வகைகள் குறித்து இடம்பெற வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு, கூறினார்.