/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி குழந்தைகள் பாதுகாப்பு கேள்விகுறி
/
சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி குழந்தைகள் பாதுகாப்பு கேள்விகுறி
சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி குழந்தைகள் பாதுகாப்பு கேள்விகுறி
சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி குழந்தைகள் பாதுகாப்பு கேள்விகுறி
ADDED : ஏப் 29, 2024 12:56 AM

கறிமத்தம்பட்டி;கருமத்தம்பட்டியில் அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
கருமத்தம்பட்டியில் போலீஸ் ஸ்டேஷன் அருகில், அவிநாசி ரோட்டை ஒட்டி, அங்கன்வாடி மையம் உள்ளது. 2018--19 ஆண்டு சூலூர் எம்.எல்.ஏ.,தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கட்டப்பட்ட இந்த மையத்துக்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர்.
இந்த மையத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கட்டடம் கட்டி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. அருகிலேயே அவிநாசி ரோடு உள்ளது. எந்நேரமும், வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். மையத்துக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன், மையத்தின் முன் பக்கமாவது சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.