/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நதிநீர் இணைப்பு திட்டம் சாத்தியமாகும்; விவசாயிகளுக்கு அண்ணாமலை உறுதி
/
நதிநீர் இணைப்பு திட்டம் சாத்தியமாகும்; விவசாயிகளுக்கு அண்ணாமலை உறுதி
நதிநீர் இணைப்பு திட்டம் சாத்தியமாகும்; விவசாயிகளுக்கு அண்ணாமலை உறுதி
நதிநீர் இணைப்பு திட்டம் சாத்தியமாகும்; விவசாயிகளுக்கு அண்ணாமலை உறுதி
ADDED : மார் 28, 2024 07:22 AM

கோவை : கோவையின் வளர்ச்சிக்கு குரல் கொடுக்க ஒரு நல்ல எம்.பி., தேவை, என, கோவை பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை ஜென்னி கிளப்பில், விவசாயம், தொழிலாளர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் அமைப்புகளுடனான சந்திப்பு, நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை பேசியதாவது:
பல்வேறு தொழில் செய்வோர், அரசியலுக்கு வராவிட்டாலும் அரசியலில் என்ன நடக்கிறது என்பதை உற்றுநோக்கி வருகின்றனர். இங்கு சந்தித்த பலர், 50 ஆண்டு காலமாக உள்ள கோரிக்கையை வலியுறுத்தி உள்ளீர்கள்.
இதுவே எங்கள் மீதான நம்பிக்கையை காட்டுகிறது. 1963க்கு பின் தமிழ்நாட்டில் பாசன வசதி நிலம் 14 சதவீதம் சுருங்கியுள்ளது. விவசாயத்துக்கு வர வேண்டிய திட்டங்கள், நன்மைகள் வரவில்லை.
மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வரும்போது, நதிநீர் இணைப்பு 2.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் செய்ய முடியும்.
ஆனைமலை - நல்லாறு திட்டத்துக்கு, 10,000 கோடி ரூபாய் தேவை. இது போன்ற கோரிக்கைகளை, மத்திய அரசால் மட்டுமே நிறைவேற்ற முடியும்.
கோவையில், நொய்யல் ஆற்றை சுத்தம் செய்ய, 970 கோடி ரூபாய் மத்திய அரசு அளித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்ற நிதி அளித்துள்ளது.
இதுவரை கோவையிலிருந்து குரல் கொடுக்க, நல்ல எம்.பி., இல்லை. இந்த குறையும் நிறைவேறும். இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்குப் பின், பா.ஜ., தேர்தல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.