/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீலகிரி தொகுதி மக்களுக்கு அர்ச்சனை செய்த அண்ணாமலை!
/
நீலகிரி தொகுதி மக்களுக்கு அர்ச்சனை செய்த அண்ணாமலை!
நீலகிரி தொகுதி மக்களுக்கு அர்ச்சனை செய்த அண்ணாமலை!
நீலகிரி தொகுதி மக்களுக்கு அர்ச்சனை செய்த அண்ணாமலை!
ADDED : மார் 26, 2024 01:38 AM
ஊட்டி;ஊட்டி மாரியம்மன் கோவிலில் நடந்த பூஜையின் போது, நீலகிரி தொகுதி மக்களுக்காக, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அர்ச்சனை செய்தார்.
நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் முருகன் நேற்று காலை, மனுதாக்கல் செய்ய ஊட்டிக்கு வந்தார். அவருடன் வந்த, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, 12:00 மணிக்கு மாரியம்மன் கோவிலுக்கு வந்தார்.
அப்போது, இருவரையும் கோவிலில் உள்ள மூன்று அர்ச்சகர்கள் வரவேற்று அழைத்து வந்தனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் காணப்பட்ட மாரியம்மன்; காளியம்மன் முன்பு இருவரும் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது, கோவில் அர்ச்சகர், அர்ச்சனை செய்ய வேண்டிய பெயர்கள் குறித்து பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலையிடம் கோட்டார்.
அப்போது, அண்ணாமலை,'பாரதம், பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் அனைத்து நிர்வாகிகள்; நீலகிரி தொகுதி லோக்சபா வேட்பாளர் முருகன்; நீலகிரி தொகுதி மக்கள்,' ஆகியோர் பெயர்களை கூறினார். அவரின் பெயர் மற்றும் குடும்பத்தார் பெயரை கூறவில்லை.
தொடர்ந்து, தேசிய தலைவர்கள் பெயருடன், அண்ணாமலை, முருகன், மூத்தநிர்வாகி போஜராஜன், மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் பெயருடன் நீலகிரி தொகுதி மக்களுக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது.
பங்குனி உத்தர சந்திர கிரகணம்
அப்போது கோவிலுக்கு வந்த ஆன்மிகவாதி ஒருவர் கூறுகையில், ' இன்று (நேற்று) பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. இது, 100 ஆண்டுகளுக்கு பின் வருகிறது. அதுமட்டுமின்றி ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
இதனால், இந்த சந்திர கிரகணம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. மேலும், இந்த சந்திர கிரகணம் நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் ஆகும். காலை, 10:23 மணிக்கு தொடங்கி மாலை 4:39 மணிக்கு முடிவடைகிறது.
இந்த நாளில் அம்மன் ஆசியுடன் தேச நலனுக்காக மனு தாக்கல் செய்வது நன்மையை ஏற்படுத்தும்,'' என்றார். இதனை கேட்ட பா.ஜ., கட்சியினர் 'பாரத் மாதாகீ ஜே' என்ற கோஷத்துடம் மனு தாக்கல் செய்ய, அண்ணாமலை; முருகனை அழைத்து சென்றனர்.

