/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணமார் தங்காத்தாள் கோவில் படுகள விழா
/
அண்ணமார் தங்காத்தாள் கோவில் படுகள விழா
ADDED : மே 12, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்;சூலுார் அடுத்த காடாம்பாடியில் உள்ள அண்ணமார் சுவாமி தங்காத்தாள் கோவில் பழமையானது. இங்கு ஆண்டு தோறும் படுகள விழா சிறப்பாக நடக்கும். கடந்த, 10 ம்தேதி மாலை காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
11ம்தேதி காலை அம்மை அழைத்தலும், அண்ணமார் சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று, அண்ணமார் சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அருள்வாக்கு கூறப்பட்டது. கிராமிய கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது.
கோவில் கமிட்டியினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.