/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 19ல் குறுமைய விளையாட்டு போட்டி துவக்கம் ஆயத்த ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு
/
வரும் 19ல் குறுமைய விளையாட்டு போட்டி துவக்கம் ஆயத்த ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு
வரும் 19ல் குறுமைய விளையாட்டு போட்டி துவக்கம் ஆயத்த ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு
வரும் 19ல் குறுமைய விளையாட்டு போட்டி துவக்கம் ஆயத்த ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு
ADDED : ஜூலை 13, 2024 08:34 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவில், மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்துவதற்கான ஆயத்த கூட்டம் நடந்தது.
பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவ, மாணவியருக்கான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.இதற்காக, பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஆயத்த கூட்டம், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மண்டல உடற்கல்வி இயக்குனர் குமரசேன் முன்னிலை வகித்தார்.கஞ்சம்பட்டி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் வரவேற்றார்.
கல்வி மாவட்ட அலுவலர் கேசவகுமார், தலைமை வகித்து பேசுகையில், ''உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்பயிற்சி, மனவள பயிற்சி இரண்டும் அளிப்பதால், படிப்பில் முழு கவனம் செலுத்தி சிறந்த மாணவர்களாக உருவாகின்றனர்.
உடற்கல்வி ஆசிரியர்களின் பங்கு முக்கியமாக உள்ளது. குறுமைய அளவிலான போட்டிகளை நன்றாக நடத்தவும், மாநில அளவில் கல்வி மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற வைக்கவும் கடும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, குறுமயை அளவிலான போட்டிகள் எந்தெந்த பள்ளிகள் பொறுப்பேற்று நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது.
அதில், கோட்டூர் குறுமைய அளவிலான போட்டிகளை திவான்சாபுதுார் அரசு பள்ளியும், கிழக்கு குறுமைய அளவிலான போட்டிகளை சிறுகளந்தை விக்னேஸ்வரா மெட்ரிக் பள்ளியும், மேற்கு குறுமைய அளவிலான போட்டிகளை கோபாலபுரம் எம்.எம்.எஸ்., பள்ளி மற்றும் மதுக்கரை குறுமைய போட்டிகளை திருமலையம்பாளையம் செயின்ட் ஆன்ஸ் பள்ளியும் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
வரும், 19ம் தேதி முதல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகஉடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி இயக்குனர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் சண்முகவேல், அன்பரசு, உமர் பரூக், முரளி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக, உடற்கல்வி ஆசிரியர் இஸ்மாயில் நன்றி கூறினார்.

