ADDED : மே 03, 2026 10:23 PM
தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், கடந்த பிப்., 1ம் தேதி முதல் பக்தர்கள் மலையேறி ஈசனை தரிசித்து வருகின்றனர். விடுமுறை தினம் என்பதால் நேற்று முன்தினம் இரவு ஏராளமான பக்தர்கள் மலையேறினர்.
ஏழாவது மலையில் நேற்று அதிகாலை 3:45 மணிக்கு, மலையேறிக் கொண்டிருந்த சுமார், 35 வயதுடைய பக்தர் ஒருவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். வனத்துறையினர், மலையில் உள்ள மருத்துவ முகாமிற்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். வனத்துறையினர், டோலி மூலம் அந்நபரின் உடலை அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆலாந்துறை போலீசார் விசாரிக்கின்றனர். இந்தாண்டு இதுவரை 7 பேர் மலையேற்றத்தின் போது உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
