/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரை ஏற்றி கொலை விவகாரம்: மேலும் ஒருவர் உயிரிழந்தார்
/
காரை ஏற்றி கொலை விவகாரம்: மேலும் ஒருவர் உயிரிழந்தார்
காரை ஏற்றி கொலை விவகாரம்: மேலும் ஒருவர் உயிரிழந்தார்
காரை ஏற்றி கொலை விவகாரம்: மேலும் ஒருவர் உயிரிழந்தார்
ADDED : ஏப் 25, 2024 11:25 PM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், கார் ஏற்றி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
சிகிச்சையில் இருந்த மற்றொரு வாலிபர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே கஸ்தூரிபாளையத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன், 29. தச்சுவேலை செய்பவர்.
இவர் தனது நண்பர்களான அருண்குமார், 24, மற்றும் வசந்தகுமார், 24, ஆகியோருடன் ஒரே ஸ்கூட்டரில் கடந்த 23ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உள்ள வீயூ பாயிண்டிற்கு சென்றார்.
அப்போது அங்கு, காரில் 6 பேர் வந்தனர். காரில் வந்தவர்களுடன் வாலிபர்கள் 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. பின் சமாதானம் ஏற்பட்டு அவரவர் வாகனங்களில் கிளம்பி சென்றனர்.
அப்போது ஸ்கூட்டரை பின் தொடர்ந்து சென்ற கார், திட்டமிட்டே ஸ்கூட்டர் மீது இடித்தது. இதில் அருண் பாண்டியன், அருண்குமார், வசந்தகுமார், ஆகியோர் கீழே விழுந்தனர். காரை ரிவர்ஸ் எடுத்து அருண் பாண்டியன் மீது ஏற்றிவிட்டு, அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த அருண் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அருண்குமார், வசந்தகுமார் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் வசந்தகுமார் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் இந்தர்சிங் உள்பட 6 பேரை நேற்று முன் தினம் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.--

