/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மது விற்பனை மையங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை; ரூ.51,500 லஞ்ச பணம் பறிமுதல்
/
மது விற்பனை மையங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை; ரூ.51,500 லஞ்ச பணம் பறிமுதல்
மது விற்பனை மையங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை; ரூ.51,500 லஞ்ச பணம் பறிமுதல்
மது விற்பனை மையங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை; ரூ.51,500 லஞ்ச பணம் பறிமுதல்
ADDED : ஏப் 12, 2024 12:12 AM
பாலக்காடு;பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, மது விற்பனை மையங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 51,500 ரூபாய் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரளாவில், மது தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அதிகளவில் விற்பனை செய்ய, விற்பனை மைய ஊழியர்களுக்கு லஞ்சம் அளிப்பதாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டி.எஸ்.பி., தேவதாசன் தலைமையிலான போலீசார், பாலக்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் கீழ் செயல்படும் மது விற்பனை மையங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது, ஒற்றப்பாலம் மது விற்பனை மையத்தில், அதிகப்படியாக இருந்த, 6,750 ரூபாயும், லஞ்சம் கொடுப்பதற்காக, அங்கு மது தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் கொண்டு வந்த, 43,510 ரூபாயும், பத்திரிப்பால மது விற்பனை மையத்தில் அதிகப்படியாக இருந்த, 1,240 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர் விசாரணையில், பறிமுதல் செய்த பணம் மது தயாரிப்பு நிறுவனம் தங்களின் தயாரிப்புகளை அதிகளவில் விற்பனை செய்வதற்காக, விற்பனை மைய ஊழியர்களுக்கு அளிக்க கொண்டு வந்தது தெரியவந்தது.
மேலும், ஒவ்வொரு மது விற்பனை மையத்துக்கும், கொச்சியை மையமாக கொண்டு செயல்படும் மது தயாரிப்பு நிறுவனம், ஒவ்வொரு மாதமும் 8,000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கொடுப்பதம் தெரியவந்தது.
இது தொடர்பாக, துறை தரப்பு நடவடிக்கை எடுக்க அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக டி.எஸ்.பி., தேவதாசன் தெரிவித்தார்.

