/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி ஜூனியர் இன்ஜி., மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
/
மாநகராட்சி ஜூனியர் இன்ஜி., மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
மாநகராட்சி ஜூனியர் இன்ஜி., மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
மாநகராட்சி ஜூனியர் இன்ஜி., மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
ADDED : செப் 11, 2024 01:56 AM
கோவை:கோவை மாநகராட்சி மத்திய மண்டல ஜூனியர் இன்ஜினியர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மாநகராட்சி மத்திய மண்டல இன்ஜி., பிரிவில் ஜூனியர் இன்ஜினியராக (பொறியாளர்) பணியாற்றி வருபவர் விமல்ராஜ். இவர் மத்திய மண்டலத்தில் நடக்கும் பல்வேறு பணிகளை கவனித்து வருகிறார்.இந்நிலையில், விமல்ராஜ் லஞ்சம் பெறுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., திவ்யா தலைமையிலான போலீசார் விமல்ராஜின் அலுவலகத்தில், சோதனை மேற்கொண்டனர்.சோதனையில், அவரின் லேப்டாப் பேக்கில், கணக்கில் வராத ரூ.1.02,100 இருப்பது தெரிந்தது. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர், அவர் லேப்டாப் பேக்கில் இருந்த பணத்தை பறிமுதல் செய்து, விமல்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.