/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப்பொருள் , மது எதிர்ப்பு விழிப்புணர்வு
/
போதைப்பொருள் , மது எதிர்ப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 27, 2025 12:10 AM

கோவை: சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியின் போதைப்பொருள் எதிர்ப்பு சங்கம் சார்பில், போதைப் பழக்கத்தின் ஆபத்துகளை விளக்கும் வகையில், போதைப்பொருள் மற்றும் மது எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோபிசெட்டிப்பாளையம் துணை கலெக்டர் சிவானந்தம், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு, உளவியல் பாதிப்பு, சமூக தாக்கம் மற்றும் மாணவர்களுக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
மாணவர்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகளை சித்தரிக்கும் நாடகம், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களால் நடத்தப்பட்டது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போதைப்பொருள் இல்லாத சமூகம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கோபிசெட்டிபாளையம் தாசில்தார் வெங்கடேசன், கல்லுாரியின் முதல்வர் பழனிசாமி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

