/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 30, 2024 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, உலக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பொள்ளாச்சி அடுத்துள்ள, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், ஆனைமலை போலீசார் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. போதை பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்ட விரோத வர்த்தக எதிர்ப்பு தினத்தையொட்டி இப்பேரணி நடந்தது.
பேரணியை எஸ்.எஸ்.ஐ., சமுத்திரபாண்டியன் துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், போதை பொருள் எதிர்ப்பு கோஷமிட்டனர். இதற்கான, ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தாமோதரன், நவீனா, சங்கரராமன், எஸ்.ஐ., கென்னடி மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.