/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூன் 28, 2024 11:31 PM

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், போதைபொருள் கடத்தலுக்கு எதிரான தினத்தை ஒட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாருதி உடற்கல்வியியல் கல்லூரியின் செயலாளர் சுவாமி வீரகானந்தா தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ஜெயபால் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பெரியநாயக்கன்பாளையம் எஸ்.எஸ்.ஐ., ஹைதர் அலி பங்கேற்று, போதை பொருட்களால் ஏற்படும் சமூக சீரழிவுகள் குறித்து, மாணவர்களிடையே பேசினார். ரயில்வே பீடர் ரோடு, எல்.எம்.டபிள்யூ., ரோடு வழியாக மாருதி உடற்கல்வியியல் கல்லூரியில் ஊர்வலம் நிறைவடைந்தது. இதில், 125க்கும் மேற்பட்ட நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
போதைப்பொருள் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை, மாணவர்கள் கைகளில் ஏந்தி சென்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகள், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் நீதிராஜா தலைமையில் செய்யப்பட்டிருந்தது.