/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுக்ரஹா மந்திர் பள்ளியில் கல்விச்சுற்றுலா உண்டு
/
அனுக்ரஹா மந்திர் பள்ளியில் கல்விச்சுற்றுலா உண்டு
ADDED : பிப் 27, 2025 09:24 PM
சூலுார் கலங்கலில் உள்ள அனுக்ரஹாமந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளி கடந்த, 15 ஆண்டுகளாக மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குகிறது.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள், வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவிகள், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பள்ளியில் நவீனதொழில்நுட்பம் சார்ந்த கல்வியை இன்டராக்டிவ் மற்றும் ஸ்மார்ட் போர்டுகள் வாயிலாக வழங்கப்படுகிறது.
பிரி.கே.ஜி., முதல் யு.கே.ஜி., வகுப்புகளுக்கு மான்டசரி கல்வி, 1 - 5 ம் வகுப்பு வரையில் 'ஆக்டிவிட்டி பேஸ்ட் லேர்னிங்' முறை, 6 -8 ம் வகுப்பு வரை 'எக்ஸ்பிரியன்டல் லேர்னிங்' முறை, 9 - பிளஸ்2 வரை சி.பி.எஸ்.இ., மற்றும் நுழைவுத் தேர்வு கல்வி முறைகளும் பின்பற்றப்படுகின்றன.யோகா, கராத்தே, பரதநாட்டியம், ஸ்கேட்டிங், ஆர்ச்சரி, சிலம்பம், இசைப்பயிற்சி கற்றுத்தரப்படுகிறது. மாணவர்கள் சர்வதேச, தேசிய, மாநில, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றுள்ளனர். மாணவர்களுக்கு உள்நாடு, வெளிநாடு கல்விச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது என்று கூறுகிறார் பள்ளி தாளாளர் ஷோபா.

