/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடுக்குமாடிகளில் அந்தந்த தளத்தில் 'மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்' வேண்டும்
/
அடுக்குமாடிகளில் அந்தந்த தளத்தில் 'மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்' வேண்டும்
அடுக்குமாடிகளில் அந்தந்த தளத்தில் 'மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்' வேண்டும்
அடுக்குமாடிகளில் அந்தந்த தளத்தில் 'மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்' வேண்டும்
ADDED : மே 11, 2024 12:44 AM

புதியதாக திட்ட அனுமதி பெறும் ஐந்து மாடி மற்றும் அதற்கு மேற்பட்ட கட்டடங்களில், வீடுகளுக்கான மின்சார மீட்டர்களில், 'மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்'களை, அந்தந்த தளங்களில் அமைக்க, மின் ஆய்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அடுக்குமாடி கட்டடங்களில் மின்சார மீட்டர்கள், மெயின் ஸ்விட்ச் பாக்ஸ் போன்றவை ஒட்டுமொத்தமாக, தரைதளம் அல்லது அடித்தளத்தில், ஒரே இடத்தில் அமைப்பது வழக்கம்.
கட்டடங்களின் தளங்களும், வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது, மின்இணைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
ஒரே இடத்தில், 50 முதல், 100 இணைப்புகளுக்கான மீட்டர்கள், மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்கள் அமைப்பதால், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அதனால் தேசிய மின் கமிஷன், 49 அடி அதாவது 5 மாடிகள், அதற்கு மேற்பட்ட கட்டடங்களில், ஒரே இடத்தில் மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்களை வைக்க தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக, மின் ஆய்வுத்துறை பிறப்பித்த உத்தரவு:
அடுக்குமாடி கட்டடங்களில் ஒவ்வொரு தளத்திலும், 'பஸ்பார் டிரங்கிங்' முறையில், மெயின் ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் மீட்டர் அமைக்க வேண்டும் என, தேசிய மின் ஆய்வு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக உயரமுடைய அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவோர், இந்த புதிய நடைமுறையை பின்பற்ற துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், பொது கட்டட விதிகளின்படி, தமிழகத்தில், 60 அடி உயரம் அதாவது, ஆறு மாடிக்கு மேற்பட்டவையே, அடுக்குமாடி கட்டடங்களாக வகைபடுத்தப்படுகின்றன.
ஆனால், தேசிய கட்டட விதிகளின்படி, 49 மீட்டர் அதாவது, ஐந்து மாடிக்கு மேற்பட்ட கட்டடங்களே அடுக்குமாடிகளாக வகைபடுத்தப்படுகின்றன.
எனவே, 49 அடிக்கு மேற்பட்ட உயரம் உள்ள கட்டடங்களில், தள வாரியாக, 'பஸ்பார் டிரங்கிங்' முறையில் மின்சார மீட்டர், மெயின் பாக்ஸ் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.