/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்ட உதவி தன்னார்வ தொண்டர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
சட்ட உதவி தன்னார்வ தொண்டர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
சட்ட உதவி தன்னார்வ தொண்டர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
சட்ட உதவி தன்னார்வ தொண்டர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 09, 2024 04:11 AM
கோவை, கோவை மாவட்டத்தில், சட்ட உதவி தன்னார்வ தொண்டர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகுழு மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலுார், மதுக்கரை, அன்னுார் ஆகிய வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு, சட்ட உதவி தன்னார்வ தொண்டர்கள், 50 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. அடிப்படை சம்பளம் மற்றும் ஊதியம் கிடையாது. சட்ட தன்னார்வலர்களுக்கு கடமை மற்றும் சேவை செய்ய மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மூத்த குடிமகன்கள், மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், சமூக தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், திருநங்கைகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை கோவை மாவட்ட நீதிமன்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க, வரும் 20 ம் தேதி கடைசி நாள். இத்தகவலை கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா தெரிவித்துள்ளார்.