/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அக்னி வீர் வாயு' வீரராக விண்ணப்பிக்கலாம்
/
'அக்னி வீர் வாயு' வீரராக விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 30, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:அக்னி வீர் வாயு (இசைக்கலைஞர்) தேர்வுக்கு, பெங்களூருவில் உள்ள ஏழாவது ஏர் மேன் தேர்வு மையத்தில், இந்திய ராணுவத்தால், ஜூலை 3 முதல், 12 வரை ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்; ஏதாவது ஒரு இசைக்கருவியை இசைக்க தெரிந்திருக்க வேண்டும். 2004 ஜன., 2 மற்றும் 2007 ஜூலை 2க்கு இடையே பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
ஆண், பெண் இரு பாலரும் இத்தேர்வுக்கு, https://agnipathvayu.cdac.in என்ற இணைய தளம் வாயிலாக, ஜூன் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய கோவை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்க, கோவை கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.